Monday, January 4, 2016

கொலுசு நடத்தும் இளம் படைப்பாளிகள் சந்திப்பு



கொலுசு நடத்தும் இளம் படைப்பாளிகளின்  சந்திப்புக் கூட்டம் வரும் 24-01-2016 அன்று பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.

இந்த சந்திப்பின் நோக்கம்
==============================
இளம் படைப்பாளிகள் அனைவரையும் கவிதை உலகில் அடுத்த கட்டத்துக்கு வெற்றிகரமாக நகர்த்துவது என்பதே கொலுசுவின் பிரதான நோக்கம்.

இந்த நிகழ்வுக்கு கொலுசுவின் முதன்மை ஆசிரியரும், புன்னகை இதழின் ஆசிரியரும், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவருமான    கவிஞர் க. அம்சப்ரியா அவர்கள் நம்மோடு முழு நேரமும் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார்  என்பதே நம் நோக்கத்தில் பாதி வெற்றி அடைந்து விட்டோம் என்று மகிழ்கிறோம்.

நம் இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் வகையில் கவிஞர் க. அம்சப்ரியா அவர்களின் ஆலோசனையின் படி பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


நிகழ்ச்சிகள் : ( மதியம் 1 முதல் 5 வரை )
============================================

1.       மதிய விருந்து 

2.       கவிஞர்கள் சுயஅறிமுகம் :
அனைவரும் தங்களை பற்றி கூட்டத்தினரிடையே அறிமுகப்படுத்திக் கொள்ளல்

3.       பிடித்த கவிதை பகிர்தல் :
தங்களுக்கு பிடித்தமான கவிதைகளை பகிர்தல்

4.       கவிதை ரசனை உரை :
இது மிக மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி. இதில் கவிஞர் க. அம்சப்ரியா அவர்கள் மரபுக் கவிதையிலிருந்து இன்றைய நவீனக் கவிதைகள் வரையிலான கவிதைகளின் பரிணாம வளர்ச்சி குறித்து நம்மோடு உரையாடுவார். அதுமட்டுமல்ல இன்றைய காலகட்டத்தில் கவிதை எப்படி இருக்க வேண்டும் எனவும், அதை நாம் எப்படி எழுத வேண்டும்  எனவும் மிக எளிமையாக விளக்குவார்கள்.

5.       கவிதை எழுதலாம் :
நாம் கவிதைகள் எழுதும் நிகழ்ச்சி

6.       படைப்புகளை வாசித்தல் 
தங்கள் படைப்புகளை கூட்டத்தினர் முன் வாசித்தல்

7.       கேள்வி பதில்
கவிதை குறித்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் கவிஞர் க. அம்சப்ரியா அவர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

8.       சிறந்த கவிதை படைப்புகள் :
நாம் படிக்க வேண்டிய நல்ல பல கவிதை தொகுப்புகள் பற்றியும், அவர்கள் கவிதைகளை கையாளும் யுக்தி குறித்தும் கவிஞர் க. அம்சப்ரியா அவர்கள் நம்மிடையே பகிர்வார்கள்.

9.       பங்கேற்பு சான்றிதழ் வழங்குதல் :
நிகழ்ச்சியில் பங்கேற்கும்  அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்..

பதிவு செய்ய அழையுங்கள் : 94 86 10 56 15

2 comments:

  1. அடடா.!இத்தனையும் அய்ந்து மணி நேரத்திற்குள்ளா.? நேர கணக்கு பற்றி உத்தேசித்தீர்களா.?

    ReplyDelete
  2. கவனத்தில் கொண்டுள்ளோம் அய்யா

    ReplyDelete