யாரும் கேட்பாரற்று
ஓரமாய் ஒதுங்கிக் கிடந்தது
ஊர்ச் சாவடியில்
ஓர் இளவட்டக் கல்.....
ஏரும் கலப்பையும்
இருக்கின்றன காட்சிப்பொருளாய்
படம் வரைந்து
பாகங்கள் குறிக்க.........
பெய்த பெருமழையின்
பெருவெள்ள நீரில்
மூழ்கித்தான் போயின
விவசாயியின்
வீடும்....கனவுகளும்....
வாங்கிய கடனில்.........
அழும்கண்ணீருடன்
அழுகிய நெற்பயிர்கள்
அறுவடை காணாது
அறுப்பரிவாள்கள்........
பாம்பின் வாய் தப்பி
மிரண்டோடும் எலிகள்
விவசாயியின் வேட்டைக்குறியில்.....
ஆழ்ந்த கவலையில்
அசைபோடும்
ஜல்லிக்கட்டுக் காளைகள்
திமிர்ந்த திமிலோடு.........
எல்லாம் ஒருபுறம்
இருந்துவிட்டுப் போகட்டும்.....
சூரிய மின்னடுப்பில்
பன்னாட்டு நிறுவனப்
பானையில்
கொள்ளைலாப விற்பனைப்
புத்தரிசியிட்டு
பிளாஸ்டிக் கரும்பு வைத்து
பேருக்கு மஞ்சக்கொலைசுற்றி
பெருகக் கொண்டாடுவோம்
இரவல் குரல் வாங்கி
......பொங்கலோ பொங்கல்.....
அடப்
......போங்களோ...போங்கள்....
கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை.
98416 13494.
அருமையா கவிதை...!
ReplyDeleteஇன்றைய...
நவீனத்தை சுட்டிகாட்டி...
பழமையை மறந்த...
தமிழர்களுக்கு...
அழகாய்...
எடுத்துரைத்தீர்...?!
அருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete