சாதனையாளர் யார் ? நானா ? கண்டிப்பாக இல்லை.
பிறந்த மூன்றே மாதங்களில், தன் தந்தைக்கு இந்த விருதை வாங்கிக் கொடுத்து இருக்கிறாளே என் மகள் கொலுசு, அவள் தான் இந்த விருதுக்கு பொருத்தமானவள்.
அவளை ஈன்றவன் என்ற முறையில், நான் என்னைத் தந்தை என்று வெளியில் சொல்லிக்கொள்ளலாமே தவிர, உண்மையில் எனக்கும் அவளுக்கும் உள்ள பந்தம் தந்தை - மகள் என்று சுருக்கி விடமுடியாது . எல்லாமே அவள் தான். அவளைப் பார்த்து கொண்டிருக்கும் போது, நான் சிறுவனாகிறேன்; துள்ளி மகிழ்கிறேன். மகிழ்ச்சியில் மறைந்தும் போகிறேன். ஏன், அவளே என் உயிரின் பிம்பம் என நினைக்கிறேன்.
அவள் என்னைப் போன்று இன்னும் பலருக்கு உயிராக வேண்டும்; அவர்களை இயக்கும் சக்தியாக வேண்டும்; அவர்களை வழிநடத்த வேண்டும். அதுவே இத்தந்தையின் ஆசை.
கெளதம் நாராயண் மற்றும் அவரது தன்னலம் கருதாத நண்பர்கள் இருக்கும் வரை எனக்கு கவலையில்லை. இந்த ஆசை நிச்சயம் நிறைவேறும்.


No comments:
Post a Comment