Wednesday, January 20, 2016

கொலுசு மின்னிதழ் தமிழர் திருநாள் கவிதைப் போட்டி - இரண்டாம் பரிசுக் கவிதை



அன்றைய ஒரு பொங்கல் நாளில்தான்
செங்கரும்புகள் எமக்குக் கசந்தது!
அன்றைய நாளின் உதயசூரியன்கூட
பிரகாசமாய் எழும்பவில்லை!
எங்கள் சனங்களெல்லாம்
ஆரவாரமாய் எழும்பிவிட்டார்கள்!
யுத்தத்தின் மத்தியிலும்-எமக்கு
இனிப்பாகவே இருந்தது!
ஏனெனில் இது
தமிழரின் திருநாளல்லவா?
திட்டமிட்டே மறக்கடிக்கப்படுகிறது
தமிழர் திருநாட்கள் எதிரிகளால் ஈழமண்ணில்!
அடுப்பின் புகை எழும் முன்பாகவே
கரும் புகையொன்று எழுந்து மண்டியது
பெரும் சத்தத்துடன்.
வீசிச் சென்ற விமானத்தின் ஓசை
அடங்கிய பின்பும் ஆதவன் வரவேயில்லை!
அழுகுரல்கள் மெல்ல உயர்கிறது!
சிதறிப்போன பொங்கல்ப் பானையருகே
வீழ்ந்து கிடக்கிறாள் பாட்டி
துண்டாகிய தலையோடு
மண்ணை முத்தமிட்டபடி!


- சுகன்யா ஞானசூரி,
இலக்கம்:33/67,
புத்தூர் அக்ரஹாரம்,
புத்தூர்,

4 comments:

  1. வலி நிறைந்த வரிகள்...?!
    தேர்விற்கு தகுதியான கவி...!
    வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  2. அருமை அருமை
    அதிலும் நீங்களே படிக்க
    கேட்டதில் மெத்த மகிழ்ச்சி

    ReplyDelete
  3. அருமை அருமை
    அதிலும் நீங்களே படிக்க
    கேட்டதில் மெத்த மகிழ்ச்சி

    ReplyDelete