நகங்கொண்டு வாழ் - பெண்ணியம்
இதழ்கள் இறுக இறுக்கப்பட்டதில்
மூச்சு நெருக்கினாலும்
மலிவான மதுக் குமட்டல்களை
சகி என்று கற்றுக் கொண்டுவிட்டோம்
கண்ணோரம் கசிந்த ஈரங்கள் திகட்டுவதாய்
எம் பிள்ளைகளிடத்தில் சொல்லிக்கொண்டு நாங்களே
விழுங்கிக் கொண்டோம் புழுச் சோற்றையும்தான்
அரிதாரம் பூசி மேருகேற்றினோம்
மேடு பள்ளங்களைக் கொண்ட வாழ்வியலில்
புதுமை என்று வேறொன்றுமில்லை
கொலையும் செய்வாள் பத்தினி அந்தக்
கோவலன்கள் சட்டையை உரிக்கத்
தயாராகிவிட்டோம் நாங்கள்
இடையினில் அறுந்து பார்வை
மேலாய் அலையும் அவலத்தை
ஆற்றிக் கொள்ளப் பழகுவதில்லை மாறாய்
குத்தூசிகள் ஏற்றி அவர்தம் வெறியை அடக்கக் கற்றோம்
இனியும் முறம் கொண்டு
புலியை அடக்கியவள் என்று
சொல்லிச் சொல்லி நாங்கள் வளரப் போவதில்லை!!
-கார்த்திகா
பெண்ணியம்...
ReplyDeleteவலி...
நிறைந்த வலிகள்...!