கொலுசு மின்னிதழின் இளம் படைப்பாளிகள் சந்திப்பு 24-01-2016 அன்று பொள்ளாசியில் ACE ஹாலில் (RP Complex) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
மதிய விருந்துக்குப்பின் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் கொலுசு மின்னிதழ் நிர்வாகியும் ஆசிரியருமான மு. அறவொளி அவர்கள் கூட்டத்தின் சிறப்பு விருந்தினரான பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் க. அம்சப்ரியா அவர்களையும், கொலுசு மின்னிதழ் தமிழர் திருநாள் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களையும், கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களையும் வரவேற்று பேசினார்.
பங்கேற்ற அனைத்து கவிஞர்களும் கூட்டத்தில் தங்களை சுய அறிமுகம் செய்துகொண்டனர்.
கொலுசு மின்னிதழ் தமிழர் திருநாள் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு சிறப்பு விருந்தினரான க. அம்சப்ரியா அவர்களும், INFINITY அறக்கட்டளையின் தலைவர் கெளதம் அவர்களும் பரிசுகள் ( கொலுசு மின்னிதழின் பாராட்டுச் சான்றிதழும், அப்பா கல்வி அறக்கட்டளை வழங்கிய ரூ1000 ரொக்க பரிசும், INFINITY அறக்கட்டளை வழங்கிய ரூ1000 மதிப்புள்ள புத்தகங்களும், பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வழங்கிய ரூ200 மதிப்புள்ள புத்தகங்களும்) வழங்கி வெற்றியாளர்களைப் பாராட்டினர்.
நமது சிறப்பு விருந்தினரான க. அம்சப்ரியா அவர்கள் கவிதைக் களம் நிகழ்ச்சியில் தான் கவிதை எழுத வந்த சூழ்நிலையையும், தனக்கும் கவிதைக்குமான தொடர்புகளையும் மிகச் சுவையாக சொன்னார்கள்.
கவிஞர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை, தங்களை ஈர்க்கும் விடயங்களை, அனுபங்களை கவிதைகளில் கையாளும் போது தான் கவிதை உயிர் பெறுகிறது என நிறைய எடுத்துக்காட்டுகளுடன் அழகாக விளக்கினார்.
மேலும் மரபுக் கவிதையிலிருந்து ஹைக்கூ வரையிலான பல கவிஞர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு திறம்பட பதில் அளித்தது எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
கவிதைக் களத்தில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் சிறப்பு விருந்தினரான க. அம்சப்ரியா அவர்களால் கொலுசு மின்னிதழ் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளர் இரா பூபாலன் அவர்கள் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.
படிகள் அறக்கட்டளையின் தலைவர் புன்னகைப் பூ ஜெயக்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
மேலும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைச் சார்ந்த திரு செந்தில் குமார், திரு ப. காளிமுத்து, திரு நாகராஜன் கூட்டத்தில் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
விழா புகைப்படங்கள் :

மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி. நான் பங்கேற்ற என் முதல் நிகழ்ச்சி. பல சந்தேகங்களை ஐயா அம்சப்ரியா அவர்களிடமிருந்து கேட்டு தெளிவடைந்தேன். சகோ இரா.பூபாலன், சகோ அறவொளி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சி நடைபெட
ReplyDeleteற முக்கிய காரணமாய் இருந்த சகோதரி தங்கத் துரை அரசி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ் நாளில் மறக் இயலா நிகழ்விது.
நன்றி கலந்த மகிழ்ச்சிகள்
நீ.சிம்மா