Sunday, January 31, 2016

கொலுசு மின்னிதழ் – சிறந்த விமர்சகர் போட்டி

கொலுசு மின்னிதழ் படைப்பாளிகளை மட்டுமல்ல , வாசகர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ஆசிரியக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் வாட்ஸ்-அப் கவிதைகளுக்கு  வாசகர்களால் பாராட்டப்பட்டு அதிக வாக்குகள் பெறும் முதல் மூன்று வாட்ஸ்-அப் கவிதைகளுக்கு தொடர்ந்து பரிசுகள் வழங்கி வருகிறோம்


கொலுசு மின்னிதழ் வாசகர்களை கௌரவிக்கும் விதமாக சிறந்த விமர்சகர் எனும் போட்டியை அறிவிக்கிறோம். இந்த பிப்ரவரி மாத (10-02-2016) இதழிலிருந்து இந்த போட்டி தொடங்குகிறது.

போட்டி:
கொலுசு மின்னிதழில் இடம் பெறும் கவிதைகள், கதைகள், கட்டுரை, சிறுவர் படைப்புகள் போன்றவற்றில் சிறந்த படைப்பை விமரிசித்து 15 வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்புங்கள்.

சிறந்த விமரிசனத்துக்கு கொலுசு மின்னிதழ் சான்றிதழும், புத்தகப் பரிசும் வழங்கப்படும்.

விமர்சனங்களை அனுப்ப :
 kolusu.fb@gmail.com

விமர்சனங்கள் கிடைக்கப் பெற கடைசி தேதி :
ஒவ்வொரு மாதமும் 2௦ ஆம் தேதி

குறிப்பு:
ஒருவர் எத்தனை விமர்சனங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
அனுப்பும் போது தங்கள் பெயர், அலைபேசி எண், புகைப்படம் (கட்டாயம் இல்லை) இவற்றையும் அனுப்பவும்

நன்றி

No comments:

Post a Comment