Tuesday, February 23, 2016

உலகப் புத்தக தினம் - நூல் விமர்சனப் போட்டி - 2016




உலகப் புத்தக தினம் யுனெஸ்கோ-வால் அறிவிக்கப்பட்டு 1995 லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஷேக்ஸ்பியர் மற்றும் பல முக்கிய எழுத்தாளர்களின் பிறந்த / இறந்த நாள் என்பதாலேயே இந்த தினம் தேர்வாகியுள்ளது.

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு (23-04-2016) வாசித்தலை மேம்படுத்தும் வகையில் புதிய போட்டியை கொலுசு மின்னிதழ் அறிவிக்கிறது. 

போட்டி விபரங்கள்:

  • தங்களைக் கவர்ந்த கவிதை, கதை, நாவல், கட்டுரை என்று எந்த வகை நூலாக இருந்தாலும் அந்த நூலைப் பற்றிய சுருக்கமான விமர்சனத்தை அனுப்பலாம்.
  • தேர்வாகும் அனைத்து சிறந்த விமர்சனங்களும் புத்தகப் பரிசினைப் பெறும்.
  • வாசகர்கள் ஆர்வமாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
  •  பள்ளி கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
  •  விமர்சனங்களை அனுப்ப : kolusu.fb@gmail.com
  •  விமர்சனங்கள் கிடைக்கப் பெற கடைசி தேதி : 15-04-2016

குறிப்பு : 

நூல் விமர்சனப் போட்டியில் தேர்வாகும் கட்டுரைகளுக்கு பரிசளிக்க விரும்பும் ஆர்வலர்கள் புத்தகப் பரிசினை அளிக்கலாம். அவை பரிசு வழங்குபவர் பெயரிலேயே வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். 
புத்தகங்களை பரிசளிப்போர் பட்டியலில் இணைந்துள்ள தற்போதைய ஆர்வலர்கள் :


  1. புன்னகை செ. இரமேஷ்  குமார் 
  2. ஆன்மன்
  3. படிகள் அறக்கட்டளை
  4. கெளதம் நாராயண் (Infinity Trust)
  5. சோலை மாயவன்

புத்தகங்களை பரிசளிப்போர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள கீழ்க் கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளவும்.

க. அம்சப்ரியா - 9095507547


மு. அறவொளி - 9486105615

இரா. பூபாலன் - 9842275662

No comments:

Post a Comment