Tuesday, February 23, 2016

கொலுசு மின்னிதழின் முதல் வெற்றி



நேற்று அமெரிக்காவிலிருந்து அலைபேசியில் ஓர் அழைப்பு.

“ தான் தொடர்ந்து கொலுசு மின்னிதழை வாசித்து வருவதாகவும், அதில் வரும் கவிதைகள், கதைகள் யாவும் அருமையாக உள்ளது எனவும் பாராட்டியதோடு தானும் ஒரு கதை எழுதி உள்ளேன் ” என்று சொன்ன அந்த பெண்மணி அறுபது வயதைத் தாண்டியவர்..... சமீபத்தில் தனது வாழ்வில் பல இன்னல்களையும் இழப்புகளையும் சந்தித்தவர். இதுவரை எதையுமே எழுதியிராதவர் என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது.

இப்படிப்பட்ட ஒரு வாசகரை கொலுசு தன்னோடு பயணப்பட வைத்தது மட்டுமல்ல அவரை ஒரு படைப்பாளியாயும் ஆக்கியிருக்கிறது என்பதை எண்ணும் போது கொலுசின் முதல் நோக்கமான படைப்பாளிகளை உருவாக்குவதும், அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்பதுமான எங்கள் இலட்சியப் பயணத்தில் இது முதல் வெற்றி என்றே கருதுகிறோம்.
இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் போது அது இரட்டிப்பாகிறது.

No comments:

Post a Comment