Thursday, February 11, 2016

கொலுசு மின்னிதழின் வாட்ஸ்-அப் கவிதைப் போட்டியில் பங்கு பெற வேண்டுமா ?

கொலுசு மின்னிதழ் வாட்ஸ்-அப் கவிதைப் போட்டியை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.  போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது.

நீங்களும் பங்கு பெற :
  • முதலில் வாட்ஸ்-அப்பில் தங்களை வாட்ஸ்-அப் கவிதைப் போட்டி எனும் குழுவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • பதிவு செய்ய 9486105615 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் கீழ்கண்ட விபரங்களை அனுப்பவும்.
    • பெயர்
    • மின்னஞ்சல் 
    • ஊர்   
  • பதிவு செய்த பின் தாங்கள் வாட்ஸ்-அப் கவிதைப் போட்டி குழுவில் இணைக்கப்படுவீர்கள்.
போட்டி விதிமுறைகள் :
  • கவிதைகள் ஐந்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதை எதை குறித்து வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • போட்டிக்கான   தங்கள் கவிதைகளை ஒவ்வொரு மாதமும்  20 ஆம் தேதி முதல் 25 வரை வாட்ஸ்-அப் கவிதைப் போட்டி எனும் குழுவில் பதியலாம்.
  • ஒருவர் எத்தனை கவிதை வேண்டுமானாலும் பதியலாம்.
  • பதியப்படும் கவிதைகளிருந்து ஆசிரியர் குழு சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் kolusu.in என்ற கொலுசு இணைய தளத்தில் மாதத்தின் முதல் நாள் பதியப்படும்.
  • இணையத்தில் பதியப்பட்ட கவிதைகளுக்கு வாசகர்கள் வாக்களிக்க முடியும். ஒவ்வொரு மாதமும்  8 ஆம் தேதி வரை வாக்களிக்கலாம்.
  • அதிக வாக்குகள் பெற்ற முதல் மூன்று கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
  •  ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கவிதைகளும் அந்த மாத கொலுசு மின்னிதழில் வெளியாகும்.
பரிசு :
கொலுசு மின்னிதழின் சான்றிதழும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment