Monday, March 28, 2016

கொலுசு நூலகத்துக்குள் நுழைந்த பிரபு





தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், இயற்கைப் பற்றாலரும், ஓவிய ஆசிரியருமான  திரு. பிரபு அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கொலுசு நூலகம் பற்றி விசாரித்தார். உடனே, மிகச் சிறந்த பணி என மனம் திறந்து பாராட்டியதோடு மட்டுமின்றி, தனது சார்பாக “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” ( இதழின் விலை ரூபாய் பதினைந்து ) என்ற மாதமிருமுறை வரும் இதழுக்கு மூன்று ஆண்டுக்கான  சந்தா செலுத்துவதாக கூறினார். மிக்க நன்றி கூறினேன்.

அப்படி கூறிய இரண்டொரு நாட்களிலேயே, கொலுசு நூலக முகவரிக்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் வந்தது.

கொலுசு நூலகத்துக்காக,  தனது பல்வேறு வேலைகளுக்கிடையிலும், தான் உறுதியளித்ததை மறவாமல், அதை விரைந்து நிறைவேற்றிய திரு. பிரபு அவர்களுக்கு கொலுசு நூலகம் தனது மட்டற்ற மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment