ஊரிலிருந்து எனது அக்கா (திருமதி தமிழரசி மோகனசுந்தரம் ) வந்திருந்தார்கள்.
“என்னடா தம்பி இது ? “ என கொலுசு நூலகம் அமைக்கும் வேலையைப்
பார்த்து கேட்டார்கள்.
நான் அதற்குப் பதில் சொன்னதும், “ இது அமைக்க எவ்வளவுடா செலவு
ஆகுது என்றார்கள்? “ நான் எண்பத்தைந்து ஆயிரம் (85,000) ஆகும் என
கொஞ்சம் சற்று தயங்கி தயங்கித் தான் சொன்னேன். ஏனெனில், “எதுக்குடா காசை இப்படி
வீணா செலவு பண்ற? புள்ளைங்க ரெண்டும் படிக்குது .. அதெல்லாம் வளர்ந்து பெரிய ஆளா
ஆனப்புறம் செய்ய வேண்டியது தானே “ என உரிமையாய் திட்டி விடுவாரோ என எண்ணினேன்.
ஆனால் நடந்ததோ “ சூப்பர்டா தம்பி, நல்ல காரியம். “
என்றதோடு தனது சார்பாக நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கவென என்னால் முடிந்தது எனச்
சொல்லி ரூ 500 (ரூபாய் ஐநூறு
) கொடுத்தார்கள்’.
அதோடு நிற்கவில்லை, “தம்பி, அடுத்த முறை வரும் போது எனக்கு தெரிந்த
நண்பர்களிடமும் இதைப் பற்றிச் சொல்லி நிறைய புத்தகங்களை கும்பகோணத்திலிருந்து நமது
நூலகத்துக்கு எடுத்து வருகிறேன்” என்று இந்த கொலுசு நூலத்தில் தன்னையும் ஆத்மார்த்தமாய்
இணைத்துக்கொண்டு சொன்ன விதம் என்னை மிகவும் நெகிழ வைத்தது.
மிக்க நன்றி அக்கா... தங்களை நினைத்து, நினைத்து மிகவும்
பெருமைப்படுகிறேன்.
No comments:
Post a Comment