அனாதைகள் இல்லம், காது கேளாதோர் பள்ளி இப்படி எது தன்
கண்ணில் பட்டாலும் போதும். உடனே அங்கு ஓடிச் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து தன்னால்
இயன்ற பல உதவிகளை செய்து வரும் மிகவும் துடிப்பான இந்த இளைஞர்
கவிஞர் கா.கோட்டீஸ்வரன் அவர்கள்.
இது மட்டுமல்ல, savethechildren.in என்ற அமைப்பின் கீழ் வளரும் ஏழைக் குழந்தைகளுக்கு
மாதம் தோறும் தமது வருமானத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கும்
இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராய் பணி புரிந்து வருகிறார்.
கவிஞர் கா.கோட்டீஸ்வரன் அவர்கள் என்னைத்
தொடர்பு கொண்டு கொலுசு நூலகம் பற்றி விசாரித்து விட்டு, புத்தகங்கள் வாங்கவென உடனடித்
தேவையாக ரூ 1000 (ரூபாய் ஆயிரம்) அளித்துள்ளார்கள். இது போதாதென்று
கொலுசு நூலகம் சம்பந்தமாய் எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் எனவும்,
தாம் அதற்கு உதவுவது தமக்கு கிடைக்கக் கூடிய பெரும் பாக்கியம் என்று கூறிய தருணமே என்
மனதில் நிறைந்து உயர்ந்து விட்டார்.
இந்தப் பதிவுக்கான அவர் சம்பந்தப்பட்ட செய்திகளையே
அவரிடம் மிகவும் வற்புறுத்தித்தான் பெற வேண்டியதாய் இருந்தது. பலர் சுய விளம்பரத்துக்காக
அலையும் இந்தக் காலக் கட்டத்தில், இப்படியும் ஒரு சில இளைஞர்கள் மிக அமைதியாய் எந்தவொரு
ஆர்ப்பாட்டமில்லாது சமுதாயத்தில் பல்வேறு நற்பணிகளை செய்து கொண்டு இருக்கத் தான்
செய்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மிக மிகப் பெருமையாக இருக்கிறது.
இதுவரை புத்தகங்களை வழங்கியோர் பட்டியல் :
இதுவரை சேர்ந்துள்ள புத்தகங்களின் வகைப்பட்டியல் :
இதுவரை சேர்ந்துள்ள புத்தகங்களின் பட்டியல் :
இதுவரை புத்தகங்களை வழங்கியோர் பட்டியல் :
இதுவரை புத்தகங்கள் வாங்க நன்கொடை வழங்கியோர் பட்டியல் :
http://kolusu.in/kolusu/z_library_reports.php?sel_what=4 

No comments:
Post a Comment