இன்று நடந்த பொள்ளாச்சி இலக்கிய வட்ட 35 வது சந்திப்பில் சகோதரி சூலக்கல் கார்த்திகா என்னிடம் கொலுசு நூலகத்துக்கு தனது சார்பாக
புத்தகங்கள் வாங்கவென ரூ 1000 (ரூபாய் ஆயிரம்) தந்தார்.
தந்ததோடு தனது சகோதரி மகள் பவனிகா
– வின் இரண்டாவது பிறந்தநாள் என்றும் பொதுவாக எங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள்
என்றால் கோயிலுக்கு ஏதாவது செய்வோம். இந்த முறை எங்கள் கொலுசு நூலத்துக்கு
செய்கிறோம் என்று சொல்லி என்னை நெகிழ வைத்தார்.
நாங்கள் கொலுசு நூலகத்தை ஒரு
மகளாகத் தான் பார்த்து வருகிறோம். ஆனால் சகோதரியோ கொலுசு நூலகத்தை ஒரு கோயிலாக
பார்த்தது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த சிலிர்ப்பிலிருந்து இந்த நிமிடம் வரை
என்னால் மீள இயலவில்லை.
கொலுசு நூலகத்தின் மீதான எனது பார்வையையே மாற்றிய சகோதரி கார்த்திகா அவர்களுக்கு
கொலுசுக் குட்டியின் சார்பாய் மிகுந்த நன்றியையும், கொலுசுக் குட்டிக்கு
கிடைத்த குட்டித் தேவதை பவனிகா – வுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் நெஞ்சார தெரிவித்துக்
கொள்கிறோம்.
( தாங்கள் அளித்த நன்கொடையில் வாங்கிய புத்தகங்களுக்கான ரசீது தங்களுக்கு அனுப்பப்படும், அதோடு அந்த புத்தகங்கள் தங்கள் பெயரிலேயே கொலுசு நூலகத்தில் வைக்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் )
( தாங்கள் அளித்த நன்கொடையில் வாங்கிய புத்தகங்களுக்கான ரசீது தங்களுக்கு அனுப்பப்படும், அதோடு அந்த புத்தகங்கள் தங்கள் பெயரிலேயே கொலுசு நூலகத்தில் வைக்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் )
இதுவரை சேர்ந்துள்ள புத்தகங்களின் வகைப்பட்டியல் :
இதுவரை சேர்ந்துள்ள புத்தகங்களின் பட்டியல் :
இதுவரை புத்தகங்களை வழங்கியோர் பட்டியல் :
இதுவரை புத்தகங்கள் வாங்க நன்கொடை வழங்கியோர் பட்டியல் :

No comments:
Post a Comment