“அண்ணா, வரும் 31 - 03 - 2016 அன்று எங்களுக்கு ஒரு முக்கியமான நாள். அதையொட்டி நாங்கள் நமது கொலுசு
நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கவென ரூபாய் ஐநூறு (ரூ 500) தர முடிவு
செய்துள்ளோம். எனவே தங்கள் வங்கி விபரங்களை அனுப்பி வைக்கவும்” என்று
சொன்ன சகோதரி அமிர்தா - தோழர் முத்து வேலவன் தம்பதியர்க்கு இன்று பனிரெண்டாவது திருமண நாள்.
அன்பளிப்பு கொடுத்ததோடு மட்டுமின்றி “அண்ணா,
நூலகம் சம்பந்தமாய் எது வேண்டுமென்றாலும் தாங்கள் எங்களிடம் தயங்காமல் கூறலாம்.
எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்” என்று சொன்ன போது, கொலுசு நூலகம்
உணர்வுப்பூர்வமாய் மெல்ல மெல்ல ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் நுழைகிறது என எண்ணி
அகம் மகிழ்ந்தேன்.
திருமண நாள் அல்லது பிறந்த நாள் போன்ற சுப தினங்களில் பெரும்பாலும் ஆடம்பரச்
செலவு செய்யும் மனிதர்களிடையே நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கித் தர வேண்டும் என
முடிவு எடுத்த தோழர் முத்து வேலவன் – தோழி அமிர்தா தம்பதியருக்கு முதலில் எங்கள்
மனம் கனிந்த நன்றிகளையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு,
இருவருக்கும் இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்களை உங்கள் அனைவரோடும் சேர்ந்து கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
இதுவரை நன்கொடை அளித்தோர் பட்டியல்
இதுவரை நன்கொடை அளித்தோர் பட்டியல்
| 1 | சாய்பாலா, பெரம்பலூர் | 2,000.00 | நூல் இன்னும் வாங்கவில்லை |
| 2 | அப்பா கல்வி அறக்கட்டளை (மு. அறவொளி) | 1,058.00 | |
| 3 | அருள்செல்வி ஈ | 1,000.00 | நூல் இன்னும் வாங்கவில்லை |
| 4 | சண்முக வடிவேல் v.s | 1,000.00 | நூல் இன்னும் வாங்கவில்லை |
| 5 | சூலக்கல் கார்த்திகா | 1,000.00 | நூல் இன்னும் வாங்கவில்லை |
| 6 | அணில் நாச்சிமுத்து | 1,000.00 | |
| 7 | கோட்டீஸ்வரன். கா | 1,000.00 | நூல் இன்னும் வாங்கவில்லை |
| 8 | அமிர்தா முத்துவேலவன் | 500.00 | நூல் இன்னும் வாங்கவில்லை |
| 9 | தமிழரசி மோகனசுந்தரம் | 500.00 | நூல் இன்னும் வாங்கவில்லை |
| மொத்த மதிப்பு | 9,058.00 | 2,058.00 | |
| மொத்த கையிருப்பு தொகை | 7,000.00 |
No comments:
Post a Comment