Friday, April 1, 2016

கொலுசுக் குட்டிக்கு கிடைத்த அருள் பார்வை

சரஸ்வதி தியாகராஜா கலைக் கல்லூரியில் கணிபொறி ஆய்வக தகவல் தொழில் நுட்பதுறையில் ஆய்வக மென்பொருளாளராக பணியாற்றி வருபவரும், கொலுசுக் குழுவோடு தொடக்கத்திலிருந்து பயணித்து வருபவரும், எங்கள் சகோதரியுமான  செல்வி ஈ. அருள்செல்வி அவர்கள், கொலுசு நூலத்துக்கு ஏற்கனவே தனது முதல் படைப்பான சாரல் மழை எனும் கவிதைத் தொகுப்பை வழங்கினார்கள். 

சென்ற வாரம் புதிய நூல்கள் வாங்கவென ரூபாய் ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்கள்.

(1) மின் மினிகள் - தாகூர்
(2) தமிழில் பிழைகள் தவிர்ப்போம் - குருசாமி அ . சா
(3) கனவுகள்    - தங்கப்பா
(4) அன்பே வெல்லும் - பூதலூர் முத்து 
(5) மனிதநேயம் மலரட்டும் - பூதலூர் முத்து 
(6) மெழுகுவர்த்திகள் -  பூதலூர் முத்து



இது மட்டுமா? நேற்று, மேற்கண்ட ஆறு நூல்களை கொலுசு நூலத்துக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்கள். 

பெயரில் மட்டுமல்ல, தனது எல்லா செய்கைகளிலும் அருளைப் பொழியும் எங்கள் அன்புச் செல்வி   ஈ. அருள்செல்வி அவர்களை கொலுசு நூலகம் சார்பாகவும், கொலுசு மின்னிதழ் சார்பாகவும், உங்கள் அனைவரோடும் சேர்ந்து வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறோம். 


இதுவரை நூல்கள் அன்பளித்தோர் விபரம் :
SNoஅன்பளிப்பு நூல்கள் மதிப்பு
1 அப்பா கல்வி அறக்கட்டளை (மு. அறவொளி) 217 18,735.00
2 பொள்ளாச்சி இலக்கிய வட்டம் 23 2,000.00
3 அணில் நாச்சிமுத்து 5 1,000.00
4 சண்முக வடிவேல் v.s 3 600.00
5 தங்கதுரைஅரசி 4 580.00
6 சோலை மாயவன் 9 445.00
7 அருள்செல்வி ஈ 7 400.00
8 கிள்ளிவேள் 6 230.00
9 ஆன்மன் 1 180.00
10 கருமலை தமிழாழன் 2 180.00
11 ராஜ்கவி 1 100.00
12 நடேசன் செ 1 100.00
13 கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி 1 80.00
14 பாண்டு 1 80.00
15 குமரகுரு அன்பு 1 70.00
16 இராகுலன் 1 50.00
17 படிகள் அறக்கட்டளை (புன்னகை பூ ஜெயகுமார்) 1 50.00
18 கதிர் பாரதி 1 50.00
19 கிருத்திகா 1 40.00
20 ஞானசூரி . மா 1 40.00

மொத்த மதிப்பு 287 25,010.00


No comments:

Post a Comment