Saturday, April 2, 2016

கொலுசு குட்டிக்கு எம்மதமும் சம்மதம்



இன்று (03-04-2016) பொள்ளாச்சி ரவுண்டானா பகுதியில் நடைப்பயிற்சியின் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சார்ந்த சில இஸ்லாமியத் தோழர்கள் சில உண்மைகளை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தில் தங்களது நூல்களை இலவசமாக எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 
 
நான் அவர்களிடம் சென்று நமது கொலுசு நூலகம் பற்றி சொல்லிய பின், நூலகத்திற்கென்று பின்வரும் நூல்களை நன்கொடையாக அளித்தார்கள்.

(1) இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா ?
(2) பைபிளில் நபிகள் நாயகம்
(3) மனிதனுகேற்ற மார்க்கம்
(4) முஸ்லிம் தீவிரவாதிகள் ?
(5) ஏசு இறை மகனா

இந்த நூல்களைக் கொடுத்ததோடு, தங்களிடம் உள்ள சிறந்த நூல்களை நூலகத்துக்கு கொடுக்கிறோம் என்ற சொன்ன போது கொலுசு குட்டிக்கு எம்மதமும் சம்மதம் என மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி விடை பெற்றேன்.



No comments:

Post a Comment