Tuesday, March 8, 2016

கொலுசுக் குட்டிக்கு ஒரு அண்ணன்






அண்ணா, கொலுசு நூலகத்துக்கு, என்னால் புத்தகங்கள் அனுப்ப இயலாது. தங்களுக்கு தொகையாக அனுப்பி விடுகிறேன். தாங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.

தாங்கள் உதவ முன்வந்ததே எனக்கு மிகுந்த ஊக்கத்தையும், தைரியத்தையும், மடை திறந்த மகிழ்ச்சியையும் தருகிறது. தங்களால் இயன்ற உதவி செய்யுங்கள் தம்பி என்றேன்.

அண்ணா, ரூபாய் இரண்டாயிரம் மட்டும் அனுப்பி உள்ளேன். இதை வைத்து போட்டித் தேர்வுக்கான பயனுள்ள நூல்களை வாங்குங்கள். இன்னும் தேவைப்பட்டால் சொல்லவும், அனுப்புகிறேன்என்று சொன்ன தம்பி,  திருச்சியில் பகுதிநேர வேலை ஒன்றைப்  பார்த்துக்கொண்டே, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இறுதியாண்டு மாணவர்

திரு. சாய்பாலா அவர்கள்

மறுமுனையில், தொடர்ந்து அவர் இன்னும் பேசிக்கொண்டே போக, “இதே கல்லூரிப் பருவத்தில் நான் என்ன செய்தேன். இப்படி ஏதாவது செய்திருக்கிறேனா .... ஒன்றும் இல்லையே .... என்ற ஒருவித குற்ற உணர்வோடுஎனக்கு என்ன சொல்வதென்றே தெரியாமலும், பேச வார்த்தைகளே இல்லாமலும் அந்த தம்பியின் உரையாடலில் இந்தப் பக்கத்தில் அலைபேசியில் மௌனமாய் நான்....

எங்கோ பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்து மக்களுக்காக நடைபெறும் ஒரு நல்ல காரியத்தில், திருச்சியில் இருக்கும் தான் ஏன் பங்கேற்க வேண்டும் என்று எண்ணாமல், பெருந்தன்மையோடு உதவ நினைத்ததோடு மட்டுமின்றி, இந்த இளம் வயதில் தாராளமாய் உதவிய அந்த நல்ல உள்ளத்தின் சொந்தக்காரரான சகோதரர் சாய்பாலா அவர்களை நெஞ்சார வாழ்த்தி வணங்கி நன்றி பாராட்டுகிறோம்.

No comments:

Post a Comment