Saturday, April 30, 2016

கொலுசு நூலகம் – இப்படியும் ஒரு மனிதரா !!!! ????



 சென்ற வாரம் சென்னையிலிருந்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொலுசு நூலகம் பற்றி விசாரித்து விட்டு, தான் சில புத்தகங்கள் அனுப்புவதாக சொன்னார். “ நன்றி, அனுப்புங்கள் தோழரே என்றேன்.


நேற்று மாலை ஒரு பெரிய பார்சல் வீட்டுக்கு வந்தது. திறந்து பார்த்தேன். முப்பது புத்தகங்கள். அத்தனையும் மிக அருமையான நூல்கள். அதன் மதிப்பு ரூ 3,105.00 (ரூபாய் மூவாயிரத்து நூற்றி ஐந்து).  

இந்த நூல்களை நேர்த்தியான முறையில் பெட்டிக்குள் அடுக்கி வைத்து, அதை பார்சல் செய்ய ஏற்றவாறு தயார் செய்து, அஞ்சல் செய்ய ரூபாய் இருநூறுக்கு மேல் செலவு செய்து அனுப்பி இருந்ததை கண்ட போது, என் மனம் அவரின் உயர்ந்த, உண்மையான  அந்த உதவும் குணத்தை கண்டு வியந்தேன்.

அவரை மாலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நன்றி பாராட்டிய போது, “இது தங்கள் நூலகத்துக்கு நான் செய்த சிறு உதவி எனவும், எனது பெயரையோ, எனது புகைப்படத்தையோ குறிப்பிட வேண்டாம்” என்று நான் எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்து விட்டார். 

தன்னை சென்னையிலுள்ள ஒரு நண்பர் என குறிப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டார்.

சொல்லவும் வேண்டுமோ, இப்படியும் ஒரு சிறந்த மனிதரா என நினைத்து நினைத்து, படுக்கையில் புரண்டு, நேற்று நான் உறக்கத்தை சந்திக்க நெடு நேரம் ஆனது.

தோழரே... தங்கள் பெயரை எங்கும் சொல்ல தாங்கள் தடை விதித்தாலும், , தங்கள் பெயர் தாங்கியே, இந்த நூல்கள் நம் கொலுசு நூலத்தை அலங்கரிக்கும் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




1
மாயா சிறுகதைகள்
125.00
2
அழியா முத்திரை
275.00
3
சோவியத்துக்கு பிந்தைய உலகம்
130.00
4
வான்கூவர்
200.00
5
அவன் - அது = அவள்
120.00
6
ஜன்னல் மலர்
50.00
7
டான் குய்க் சாட்
380.00
8
கை
40.00
9
மண் மகள்
50.00
10
மஞ்சணத்தி
250.00
11
அருகன்
110.00
12
ஓ பக்கங்கள்
120.00
13
ஓர் இந்திய கிராமத்தின் கதை
110.00
14
அபிதா
70.00
15
கிருஷ்ணன் நிழல்
40.00
16
ஓர் இரவில் ஒரு ரயிலில்
25.00
17
காகிதச் சங்கிலிகள்
40.00
18
விருப்பமிலாத் திருப்பங்கள்
50.00
19
இராமன் கடந்த தொலைவு
155.00
20
வெயில் உலர்த்திய வீடு
75.00
21
மணலின் கதை
50.00
22
நீரிலலையும் முகம்
60.00
23
றஞ்சனி கவிதைகள்
40.00
24
ரெண்டாம் ஆட்டம்
60.00
25
முடிந்து போன தசையாடல் பற்றிய கதை
150.00
26
நினைவுக்கு வராத காரணங்கள்
40.00
27
ஒரு மழை நாளும் நிசி தாண்டிய ராத்திரியும்
65.00
28
கரையும் நினைவுகள்
115.00
29
பயனற்ற கண்ணீர்
60.00
30
ஒரு மாலைப் பொழுதும் சில மழைத் தூறல்களும்
50.00


3105.00

No comments:

Post a Comment