இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாழுரைச்
சேர்ந்தவரும், தமிழில் பல்வேறு பட்ட மேற்படிப்புகளை முடித்தவரும், பட்டிமன்றம்,
கருத்தரங்கம், கவிதை அரங்கம் என தன்னை தொடர்ந்து இலக்கிய உலகில் ஈடுபடுத்திக்
கொண்டு வெற்றி நடை போடுபவருமான
புலவர் மு. அப்துல் மாலிக்
அவர்கள்
கொலுசு நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கவென ரூபாய் ஆயிரம் (ரூ 1000) தானாக முன்வந்து அனுப்பியதோடு மட்டுமல்ல,
விரைவில் வெளிவர இருக்கும் தனது கவிதை தொகுப்பான “மரபை மீறிய கவிதைகள்”
எனும் நூலையும் நூலகத்துக்கு தருவதாக கூறியுள்ளார்கள். .
புத்தகங்கள் வாங்க உதவிய புலவர் மு. அப்துல் மாலிக் அவர்களுக்கு கொலுசு
நூலகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும், அவர் தம் கவிதை தொகுப்பான “மரபை மீறிய கவிதைகள்” வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment