Wednesday, June 29, 2016

கொலுசு நூலகத்தில் ஸ்டெல்லா தமிழரசி





கவிஞரும், இனிய குரலுக்கு சொந்தக்காரருமான (FM ரேடியோவில் பணியாற்றியவர்)  தோழி ஸ்டெல்லா தமிழரசி அவர்கள், சென்னையிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு, தான் கொலுசு நூலகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி, கீழ்கண்ட மூன்று புத்தகங்களை கூரியரில் அனுப்பி உள்ளார்கள்.

  • WEBSTER COMPREHENSIVE DICTIONARY – I, (International Edition)
  • WEBSTER COMPREHENSIVE DICTIONARY – II (International Edition)
  • OXFORD THESASAURUS

அதோடு அவர் அனுப்பி இருந்த கடிதத்தில் உள்ள வாசகங்களில் ஒரு பகுதியை மட்டும் அப்படியே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

தங்களின் நூலகத்திற்கு நன்கொடை வழங்கும் நிலையில் நான் இல்லை. கட்டாயம் வேலை கிடைத்த பிறகு என் முதல் மாத சம்பளத்தை நன்கொடையாக அளிப்பேன்.”

கொலுசு நூலகத்துக்கு கிடைத்தது புத்தகங்கள் மட்டுமல்ல, சென்னையிலிருந்து ஒரு மென்மையான, மேன்மையான உள்ளமும் தான். இதற்கு எத்தனை மாத சம்பளம் கொடுத்தாலும் ஈடாகாது. உங்கள் அன்பை எண்ணி எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

தோழிக்கு விரைவில் அவருக்கு பிடித்தமான வேலை கிடைக்க கொலுசு நூலகம் சார்பாகவும், நம் அனைவரின் சார்பாகவும் நெஞ்சார வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment