“அறவொளி, உனக்கு பத்து கணினிகள் வாங்கித் தருகிறேன். நூலகத்தை இன்னும் சிறப்பாக்கு” என்று சொன்னார்.
“அவ்வளவு வேண்டாம், எனக்கு தற்போதைக்கு நூலக பயன்பாட்டிற்கும், நல்ல தமிழ் / ஆங்கில நூல்களை இணையத்திலிருந்து தரவிறக்கி மாணவர்கள் படிக்கவும் இரண்டு மடிக்கணினிகள் கிடைத்தால் போதும்.“ என்றேன்.
சரியென்று சொல்லி, இரண்டு புதிய HP மடிக்கணினிகளை வாங்கி கொலுசு நூலத்துக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்கள்.
உயர்ந்த உள்ளமும், பெருந்தன்மையும் கொண்ட நண்பர் ராமதுரை அவர்களுக்கும், அவர் தம் துணைவியாருக்கும் நமது கொலுசு நூலகம் சார்பாகவும், இப்பகுதி பொள்ளாச்சி மக்கள் அனைவரின் சார்பாகவும் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:
Post a Comment