பேருந்து நிலையத்திலிருந்து
பழனி மலை அடிவாரத்திற்கு
குதிரை வண்டியில் கூட்டிப் போனால்
குதுகலிப்பான்
என நினைத்துக் கேட்டால்
வேண்டாம் தாத்தா
குதிரைக்கு வலிக்கும் என்ற பேரனை
நாமெல்லாம் ஏறிப் போனால் தான்
குதிரைக்கு கொள்ளே கிடைக்கும் என்று
சமாதானப்படுத்தி ஏற்றினேன்
வண்டிக்காரன் மடியில் தான் அமர்வேன் என
பிடிவாதத்தோடு அமர்ந்து
வண்டிக்காரன் சாட்டையை குதிரை மீது சொடுக்க
உயர்த்திய ஒவ்வொரு முறையும்
பேரனின் பிஞ்சுக் கைகள் அதைத் தடுத்தது
உச்சிக்கு நடந்து போகலாமா
இழுவையில் போகலாமா என்ற
மகன், மருமகளிடம்
என் கடவுள் தரிசனம் முடிந்ததப்பா என
அடிவாரம் வந்திறங்கிய பின்
குதிரையின் காலைத் தொட்டு
கும்பிட்ட பேரனை தூக்கி
உச்சி முகர்ந்து ஆரத்தழுவினேன்....
பழனி மலை அடிவாரத்திற்கு
குதிரை வண்டியில் கூட்டிப் போனால்
குதுகலிப்பான்
என நினைத்துக் கேட்டால்
வேண்டாம் தாத்தா
குதிரைக்கு வலிக்கும் என்ற பேரனை
நாமெல்லாம் ஏறிப் போனால் தான்
குதிரைக்கு கொள்ளே கிடைக்கும் என்று
சமாதானப்படுத்தி ஏற்றினேன்
வண்டிக்காரன் மடியில் தான் அமர்வேன் என
பிடிவாதத்தோடு அமர்ந்து
வண்டிக்காரன் சாட்டையை குதிரை மீது சொடுக்க
உயர்த்திய ஒவ்வொரு முறையும்
பேரனின் பிஞ்சுக் கைகள் அதைத் தடுத்தது
உச்சிக்கு நடந்து போகலாமா
இழுவையில் போகலாமா என்ற
மகன், மருமகளிடம்
என் கடவுள் தரிசனம் முடிந்ததப்பா என
அடிவாரம் வந்திறங்கிய பின்
குதிரையின் காலைத் தொட்டு
கும்பிட்ட பேரனை தூக்கி
உச்சி முகர்ந்து ஆரத்தழுவினேன்....
No comments:
Post a Comment