சகோதரி தங்கத்துரைஅரசி அவர்கள் கொலுசை எனது மருமகள் என்று சொன்னதும், பெரியவர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்கள் தங்களுக்கு மகள் என்றால் எனக்கு பேத்தி தானே என தாமாய் முன்வந்து உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதும் மனதுக்கு சொல்லவொண்ணா மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இன்று எங்களுக்கு
ஒரு பொன்னாள். ஏன் தெரியுமா ? கொலுசு நூலகத்திற்கான இடம் ஒரு 20 x 20 சதுர அடியில்
தேர்வாகியது.
தேர்வான
இடத்தை என் மகளிடம் காட்ட “இங்குள்ள இளநி மரம் மற்றும் குட்டி குட்டிப் பூ பூக்கும் மகிழம்பூ மர நிழலிலேயே
எனது விளையாடும் இடம் அமைய வேண்டும். அவங்களை வெட்டாதீங்கப்பா“ என அவள் வற்புறுத்தியதால், என்னால் அவள்
பேச்சை மீற முடியவில்லை. இந்த சிறு வயதில் இவளுக்கு இயற்கை மீது இவ்வளவு பாசமா
எனும் போது அவளை நினைத்து மிகவும் பெருமை கொண்டேன்.
நூலக வேலைகளைத்
தொடங்க திரு நாச்சிமுத்து அய்யா அவர்கள்
அழைத்து வந்த திரு அப்துல் ரஹ்மான் அவர்களோடு ஒப்பந்தம் போடப்பட்டது. நூலகத்திற்கான
பணி முடிக்க ரூபாய் அறுபத்தி நான்காயிரம் என்று முடிவாகியது. எங்கள் இந்த
பொதுக் காரியத்திற்காக திரு அப்துல்
ரஹ்மான் அவர்கள் பெரிய மனதோடு தன்னால் இயன்றது எனச் சொல்லி ரூபாய் மூவாயிரம்
குறைத்துக் கொண்டதோடு அல்லாமல் நூலகத்தின் உட்புறம் முழுவதும் இலவசமாய் பெயிண்ட்
அடித்து தருவதாயும் கூறி நல்ல காரியங்களுக்கு நல்ல உள்ளங்கள் எப்போதும் தோள்
கொடுக்கும் என்று எங்களுக்கு நிரூபித்தார்.
முன் பணமாக ரூபாய்
பதினைந்தாயிரம் திரு அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு தாத்தா ( பெரியவர்
திரு நாச்சிமுத்து அய்யா ) அவர்களின்
பொற்கரங்கள் மூலமாக வழங்கப்பட்டது. அது சமயம் ஓரக் கண்ணால் என் மகளைப் பார்த்த
போது, “அப்பா” என கூவியபடி என்னை நோக்கி ஓடிவந்து ஒரே தாவலில் தோளில் ஏறி பாசமாய் என்
கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டாள்.
(தொடரும்)


No comments:
Post a Comment